சிவகங்கை–மானாமதுரை இடையே விபத்து: ஒருவரும் 8 ஆடுகளும் பலி – சிசிடிவி மூலம் வாகனம் கைது
சிவகங்கை – மானாமதுரை இடையிலான சாலையில் நடந்த விபத்தில், ஒரு ஆண் மற்றும் எட்டு ஆடுகளை மோதிய வாகனம், விபத்துக்குப் பிறகு நிற்காமல் தப்பிச் சென்றது.
இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சாலையோரங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, விபத்தில் ஈடுபட்ட வாகனத்தை கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனம் ராமேஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்தே தப்பித்து தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the conversation